அத்திப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சுவையான பழமாகும். இந்த பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது. இவற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அவற்றில் வைட்டமின் கேயும் உள்ளது. இது எலும்பு வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது.