தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமலஹாசன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “தமிழ்நாடு துணை முதலமைச்சராக உயர்ந்துள்ளதற்கு வாழ்த்துக்கள். அரசியலமைப்பு மீதும், தமிழ்நாடு மக்கள் மீதும் நீங்கள் எடுத்துள்ள உறுதி மொழியை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.