லாரிக்கு அடியில் சிக்கிய போதும் உயிர்பிழைத்த நபர் (வீடியோ)

82பார்த்தது
வாகனத்தில் செல்பவர்கள் கவனக்குறைவால் விபத்துக்குள்ளாவது வாடிக்கைதான். இதில் பலர் நூலிலையில் உயிர் தப்புகின்றனர். அதுபோல இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்தில் இருந்து தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிக்னலை கவனிக்காமல் இருசக்கர வாகன ஓட்டி வேகமாக திரும்புகிறார். அப்போது மழைக்காலத்தால் தரை ஈரமாக இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த அவர் கீழே விழுகிறார். அந்த சமயம் பின்னால் வந்த லாரியின் அடியில் அவர் சிக்குகிறார். இருந்தபோதிலும் சுதாரித்து உடனடியாக எழுந்து விடுகிறார். இதனால் அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் எப்போது எங்கு நடந்தது என தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி