3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள்.. அரசு அறிவிப்பு

80பார்த்தது
3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்கள்.. அரசு அறிவிப்பு
தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் காலியாகவுள்ள 3,274 ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட 8 மண்டலங்களில் பணியிடங்கள் உள்னன. ஓட்டுநர், நடத்துனர் பணிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நாளை முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை http://arasubus.tn.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். MTC, SETC, TNSTC உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி