மின் வேலியில் சிக்கி பலியானவரை கிணற்றில் வீசிய கொடூரம்

80பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் அமைத்த மின் வேளியில் சிக்கி பலியான விவசாயி உடலை கிணற்றில் வீசிய கொடூரம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். , விவசாய கூலி தொழிலாளியான இவர் ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் (ஆக.,28) இரவு இவரது ஒரு ஆடு காணாமல் போன சூழலில் ஆட்டை தேடி நக்கலப்பட்டி, குஞ்சாம்பட்டி, பேச்சியம்மன் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள தோட்டத்து பகுதியில் தேடியுள்ளார். அப்போது பேச்சியம்மன் கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் தோட்டத்தில் அமைக்கப்பட்ட மின்வேளியில் சிக்கி முருகன் உயிரிழந்தார்.

இந்நிலையில் குற்றத்தை மறைக்க இறந்த முருகனின் உடலை அருகில் உள்ள 100 அடி கிணற்றில் கருப்பசாமி தனது உதவியாளர்களுடன் வீசியுள்ளார். முருகன் கிணற்றில் பிணமாக மிதந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள், காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் கருப்பசாமி உள்ளிட்ட அவருக்கு உதவியாக இருந்தவர்கள் என மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி