உசிலம்பட்டியில் சாலை மறியல்.

54பார்த்தது
மதுரை உசிலம்பட்டி பேரையூர் திடீர் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டமான 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு முறையாக பணி வழங்கப்படவில்லை என தெரிகிறது

இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லாத சூழலில், இன்று மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.

இந்த மறியலால் உசிலம்பட்டி, பேரையூர் நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி