மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர். சி சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆர். சி பள்ளிகள் சார்பாக ஆள் கடத்தல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
உசிலம்பட்டி பள்ளி தாளாளர் ரோஜாமனி முன்னிலை வகித்தார். வளன்சபை இல்லதலைவி அருட் சகோதரி சூசையம்மாள் வரவேற்று பேசினார். இவ்விழாவில் காவல் சார்பு ஆய்வாளர் லீலாவதி மற்றும் சிறப்பு ஆய்வாளர் சாந்தி ஆகியோர்கள் தலைமை ஏற்று ஆள் கடத்தல் குறித்தும், பெண்கள், பெண் குழந்தைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகள் குறித்து பேசினார்கள்.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்லூயிஸ்மெர்சி, உதவி தலைமை ஆசிரியர் விமலா மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சகாயம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர். அதனை. தொடர்ந்து மனித சங்கிலி பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை காவல் சார்பு ஆய்வாளர் லீலாவதி தொடங்கி வைத்தார். பள்ளியில் இருந்து மனித சங்கிலி பேரணியானது தொடங்கி பேருந்து நிலையம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் பொது மக்களிடையே ஆள் கடத்தல் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.