தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலர்.

55பார்த்தது
மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி (கிராம ஊராட்சி) அலுவலர் அறை முன்பு வாயில் கருப்பு துணியுடன் அமர்ந்து விரகனூர் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திப ராஜன் தர்ணாவில் ஈடுபட்டார்.

விரகனுார் ஊராட்சி பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற
முக்கிய பிரச்சனைகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளா வில்லை.
இன்று விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா விடம் நேரிடையாக புகார் செய்தும் கண்டு கொள்ள வில்லை.

மக்களின் பிரதிநிதியான ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன் 3 மணி நேரமாக வாயில் கருப்பு துணியை கட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து அதிமுக ஒன்றிய குழு தலைவர் நிலையூர் முருகன் வந்து கவுன்சிலர் பார்த்திபராஜனிடம் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பேராட்சி பிரேமா விரகனூர் பகுதியில் இன்று மாலை ஆய்வு செய்வதாகவும் அடிப்படை பிரச்சனைகளில் உடனடியாக தலையிட்டு தீர்வு செய்வதாகவும் உறுதியளித்த என் பேரில் ஒன்றிய கவுன்சிலர் பார்த்திபராஜன் தனது தர்ணா போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.

தொடர்புடைய செய்தி