மதுரை திருப்பரங்குன்றம் அருகே தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன் (45) என்பவர் அக். 2 ல் குடும்பத்துடன் திருப்பதி சென்றுவிட்டு. நேற்று (அக். 7) வீடு திரும்பியபோது அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே 4 அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் தெரிந்தது. உடனடியாக ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.