மதுரை திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில் தொடர்ந்து வீட்டில் திருடிய பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பசுமலை விநாயகர் நகர் கம்பர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாவின் மனைவி பூர்ணிமா என்பவர் கடந்த 29-ந் தேதி மதியம் பள்ளியிலிருந்து மகளை அழைப்பதற்காக சென்ற அவசரத்தில் வீட்டை பூட்டாமல் கதவை மட்டும் சாத்தி வைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2 கிராம் தங்க நகை காணவில்லை.
இதேபோன்று மறுநாள் 30-ந் தேதி மதியமும் பள்ளிக்கு சென்று வழக்கம்போல் திரும்பி வந்தார். அப்போதும் வீட்டில் பீரோவில் இருந்த ரூ. 11 ஆயிரம் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பூர்ணிமா புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற தியாகராஜர் காலனியை சேர்ந்த டேவிட் சாலமன் மனைவி மேரி பத்மினியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் விசாரணை செய்ததில் அவர் நகை, பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மேரி பத்மினியை கைது செய்து நகை பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.