பல்கலைகழகம் முன்பு மாணவிகள் போராட்டம்.

84பார்த்தது
மதுரை கீழக்குடியில் உள்ள மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் பி. காம் 3ம் ஆண்டு முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்காததால் மாணவிகள் பல்கலைக்கழக வாயிலில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கொடைக்கானலில் உள்ள மதர் தெரசா பல்கலைக்கழகத்தின் கல்லூரி ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மதுரை கீழக்குடியில் உள்ளது.

இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு பி. காம் சேர்ந்த மாணவிகளுக்கு தற்போது 2024 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு பட்டப் படிப்பு முடிந்தும் சான்றிதழ் வழங்கவில்லை.

இது குறித்து மதர் தெராசா பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயக்குநர் புஷ்பராணி கடந்த 10 தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தையில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
இன்று மாணவிகளுக்கு சான்றிதழ் வாங்க வரச் சொல்லி போனில் அழைத்துள்ளார். அதன் பேரில் இன்று மாணவிகள் பல்கலை கழகத்திற்கு வந்தனர்.

பல்கலை கழக இயக்குநர் புஷ்பராணி மாணவிகளிடம் சான்றிதழ் வழங்க மறுத்தையடுத்து - மாணவிகள் மதர் தெராசா பல்கலைகழக நுழை வாயிலில் மாணவிகள் 8 பேரும் சான்றிதழ் வழங்க கோரி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக இயக்குனர் புஷ்பராணியிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி