மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் சமயபுரம் மாரியம்மன் கோவில் 55வது ஆண்டு விழா பால்குடம் மற்றும் அக்கினி சட்டி, அழகு குத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள பழமை வாய்ந்த சமயபுரம் மாரியம்மன் கோவில் 55வது ஆண்டு பொங்கல் விழா இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் நேர்த்தி கடனாக பால்குடம் அக்கினி சட்டி, பறவை காவடி மற்றும் அழகு குத்துதல் போன்ற நிகழ்வுடன் வீதி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
விழா விழாவில் நூற்றுக்கணக்கானோர் பால்குடம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து வந்தனர் இதனை தொடர்ந்து இன்று மாலை முளைப்பாரி ஊர்வலம் நாளை திருவிளக்கு பூஜை மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்னதான பூஜை நடைபெற உள்ளது.
பால்குட விழாவில் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.