திமுகவின் வெற்றி நிரந்தரமான வெற்றி கே. கே. எஸ். எஸ். ஆர். பேட்டி

63பார்த்தது
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:

இந்தியாவில் ஒரு மாநிலத்தில் முழுமையாக வெற்றி அடைந்த ஒரே தலைவர் முதல்வர் தான். பிரச்சாரத்தில் 40க்கு 40 என்று சொன்னதைப் போல வெற்றி பெற்றிருக்கிறோம். இது இந்த அரசுக்கு பொதுமக்கள் தருகிற அங்கீகாரம். நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் முதல்வரின் செயல்பாட்டுக்கு, பொதுமக்களுக்கு கிடைக்கிற நன்மையை பொறுத்து அதற்காக மக்கள் ஓட்டு போட்டு 40க்கு 40 வழங்கியுள்ளார்கள் இந்த வெற்றி தொடர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கிடைக்கும்.

இந்தியா கூட்டணி அடுத்த நகர்வு குறித்த கேள்விக்கு:

அது டெல்லி அரசியல், அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும்.

தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதா என்ற கேள்விக்கு:

வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியாது வேட்பாளர், அந்த இடத்தில் உள்ள சூழ்நிலை பொருத்து தான் முடிவு கிடைக்கும். அதிமுக, பஜக வேட்பாளர்களின் சூழ்நிலையை பொறுத்து தான் வெற்றி இருக்கும். திமுகவின் வெற்றி நிரந்தரமான வெற்றி என வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறினார்.

தொடர்புடைய செய்தி