திருப்பரங்குன்றத்தில் துண்டுபிரசுரங்கள் வழங்கிய சிஐடியூவினர்

76பார்த்தது
திருப்பரங்குன்றத்தில் துண்டுபிரசுரங்கள் வழங்கிய சிஐடியூவினர்
மதுரை திருப்பரங்குன்றம் பகுதிகளில் போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க மக்கள் சந்திப்பு இயக்கம் பற்றிய துண்டு பிரசுரங்களை சிஐடியூ தொழிற்சங்கத்தினர் வழங்கினார்கள்.

போக்குவரத்து கழகத்தை பாதுகாக்க மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொழிலாளர் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
கழகங்களின் வரவுக்கும்
செலவுக்கும் உள்ள விததியாச தொகையை பட்ஜெட்டில் தர வேண்டும். 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவாரத்தையை தொடங்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் மின்சார பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவதை கைவிட வேண்டும். காலாவதியான பேருந்துகளை மாற்ற வேண்டும் பேருந்துகளுக்கு தேவையான உதிரி பாகங்களை கொள்முதல் வழங்க வேண்டும். வாரிசு வேலை வழங்க வேண்டும் காலிபணியிடங்கள்
முழுமையாக நிரப்புவதோடு, ஒப்பந்த பணியாளர் முறையை கைவிடவேண்டும் என ஜூலை 24, 25, 26 தேதிகளில் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.

இந்த சந்திப்பு இயக்கத்தின் விளக்க நோட்டீஸ்களை திருப்பரங்குன்றம் பகுதிகளில் சிஐடியூ போக்குவரத்து தொழிலாளர்கள் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்தி