புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் அறிவிப்பு.

62பார்த்தது
புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் அறிவிப்பு.
மதுரை அருகே காமராசர் பல்கலைக்கழகத்தில் புதிய சிண்டிகேட் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை காமராஜ் பல்கலை கழகத்திற்கு புதிய சிண்டிகேட் உறுப்பினர்களாக மதுரைக் கல்லூரி பொருளியல் துறை பேராசிரியர் எஸ். தீனதயாளன், சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி வணிகவியல் துறைப் பேராசிரியர் கேத்தராஜ் ஆகிய இருவரை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நியமித்துள்ளார்.

இப்பல்கலை கவர்னர் பிரதிநிதி சிண்டிகேட் உறுப்பினர்களான டாக்டர் ஆர். லட்சுமிபதி, விஞ்ஞானி வாசுதேவன் ஆகியோர் பதவிக்காலம் வரும் செப். 9ல் முடிவடைகிறது

இந்நிலையில் இவர்களுக்கு பதில் தீனதயாளன், கேத்தராஜ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதில் பேராசிரியர் தீனதயாளன் 2018 முதல் 2021 வரை ஏற்கெனவே இப்பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி