அவனியாபுரத்தில் அமமுக ஆர்ப்பாட்டம்.

61பார்த்தது
மதுரை அவனியாபுரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மின்கட்டணர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 13 பெண்கள் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர்.

மதுரை அவனியாபுரம் பேரூந்து நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெற்றது. அவனியாபுரம் பகுதி செயலாளர் மணி முன்னிலை வகித்தார்.
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொடர்ந்து நான்காவது முறையாக ஏற்றப்பட்ட மின்சார கட்டணத்தை குறைக்க கூறியும் அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன ஆர்பாட்டத்தில் தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர், அணி செயலாளர்கள் நாகநாதன், கார்த்திக் , ராஜா , வழக்கறிஞர் செல்வம் மற்றும் வட்ட செயலாளர்கள் சண்முகவேல் , வழி விட்டான், தட்சிணாமூர்த்தி, முத்துராமலிங்கம், செல்லையா மற்றும் 13 பெண்கள் உள்ளிட்ட 80 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி