தரமான பாலம் அமைக்க வேண்டும். கவுன்சிலர்கள் பேச்சு.

67பார்த்தது
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மண்டலம் 5 திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மண்டல தலைவர் சுனிதா விமல் தலைமையில் உதவி ஆணையர் ராதா, உதவி செயற் பொறியாளர் முத்து பாலசுப்பிரமணியன்,
செயற்பொறியாளர் பாக்கிய லெஷ்மி, திட்டமிடல் வளர்ச்சி அலுவலர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் பல்துறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

99 வது மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா குறிப்பிடுகையில்

99 வது வார்டு பகுதியில் உள்ள செட்டிகுளம் வடிகால் வாய்க்கால் சீரமைக்க வேண்டும் மாமன் நகர் தேவி நகர், செங்குன்றம் நகர், பாலசுப்ரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைத்து சீரமைக்க வேண்டும் தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் மழை நீர் தேங்காத வகையில் வரும் முன்னரே பணிகளை துவக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்

94வது மாமன்ற உறுப்பினர் ஸ்வேதா சத்தியன் குறிப்பிடுகையில்
சாலையில் இணைப்பு பாலம் அமைக்க 5 லட்ச ரூபாய்க்குள் அதிகாரிகள் கூறுகின்றனர் ஐந்து லட்ச ரூபாய்க்குள் எவ்வாறு அமைக்க முடியும் அவ்வாறு அமைத்தால் தரமற்றதாக அமையும் பொதுமக்கள் நம்மிடம் குறை கூறுகின்றனர். அதிகாரிகள் நல்ல தரமான பாலம் அமைத்து பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும். ஐந்து லட்ச ரூபாய்க்குள் பாலம் கட்ட வேண்டும் என்றால் அது தரமற்றதாகும். இது நமது முதல்வருக்கும் நமக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்தி