டூவீலரில் 1 கிலோ கஞ்சாவுடன் வந்த நபர் கைது.

67பார்த்தது
டூவீலரில் 1 கிலோ கஞ்சாவுடன் வந்த நபர் கைது.
மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் வந்த நபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி போலீசார் வேடர் புளியங்குளம் பகுதியில் ரோந்து ணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த முத்து ராசா (34) இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்து போலீசார் சோதனையிட்ட போது அவரிடம் ஒரு கிலோ 400 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி