மதுரை பசுமலை அருகே தாழ்வாக சென்ற மின்சார வயரில் மாநகர அரசு பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்து நிறுத்தப்பட்டு உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன் கோத்தகிரி அருகே அரசு பேருந்தின் மீது மின்சார கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மின்சார துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய துறையினர் மிக அலட்சியமாக இருப்பதாலேயே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாக இதனை கண்ட பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.