மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆய்வு மேற்கொண்ட போது திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார் நேரில் சென்று திருமங்கலம் தொகுதி மக்களுக்கு பல அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்தார்.
திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் அப் பகுதிகளில் குழி தோண்டப்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இந்த பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு வேலிகளை அமைக்க வேண்டும் என்றும், அதேபோல் இந்தப் பகுதி சாலையோர வியாபாரகளுக்கு உரிய இடங்களை அமைத்து தரவேண்டும்.
ஆலம்பட்டி ஊராட்சி மேல்நிலைப் பள்ளியில் நான்கு வழி சாலை ஒட்டி வருவதால் பள்ளி மாணவர்கள் செல்ல மாற்று பாதை அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்றும், அதேபோல் பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்ட இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை.
விரைவாக நிதி ஒதுக்கி தருமாறும், ஏழூர் முத்தாலம்மன் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அம்மாபட்டி கிராமத்தில் சப்பரம் எடுத்துச் செல்லப்படும் பாதையில் தற்போது சாலை அமைக்க பணி நடைபெற்று வருகிறது. இதில் நடுரோட்டில் 14 மின்கம்பங்கள் உள்ளது இதனால் சப்பரம் செல்ல மிகவும் சிரமம் ஏற்படும் அதனால 14 மின் கம்பங்களை அரசின் சார்பில் அப்புறப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.