மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாதீர்!

68பார்த்தது
மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாதீர்!
கால்நடைகளுக்கு முன் கூட்டியே கோமாரி தடுப்பூசி போடப்பட்டு இருப்பதால் இந்த மழைக்கு நோய் தாக்க வாயப்பில்லை என கால்நடைகள் பராமரிப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குநர் திருகுமரன் கூறினார். இது குறித்து பேசிய அவர், கால்நடைகளை மின் கம்பம், உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் கட்டி வைக்கக் கூடாது. மழைக்காலத்தில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக்கூடாது. ஈரம், சகதி, தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மாடுகளை கட்டி வைக்க வேண்டாம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி