மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள சீலை நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டி. இவரது மனைவி குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்ற போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது இதனைப் பாண்டி, அவரது தந்தை வெள்ளைச்சாமி ஆகியோர் தட்டி கேட்டனர். இதில் ஏற்பட்ட மோதலில் பாண்டி, அவரது மனைவி, வெள்ளச்சாமி ஆகியோர் கத்தியால் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகன், அவரது மனைவி கவிதா உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்றனர்.