திருமங்கலம் கள்ளிக்குடி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சிவப்பு சோளம் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
காட்டு விலங்கான பன்றிகள் மான் மயில்கள் இரவு நேரங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன இதனால் விவசாயிகள் பல்வேறு இழப்புகளைச் சந்திக்கிறார்கள்.
இந்நிலையில் விவசாய நிலத்தை அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அழைத்துச் சென்று காண்பித்துச் சான்றிதழ் வாங்கி சான்றுகளுடன் அழிவு ஏற்படுத்தப்பட்டுள்ள புகைப்படத்துடன் சேர்த்து வனத்துறை அலுவலகத்தில் கொடுத்து இழப்பீடு பெற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.