இன்ஸ்பெக்டர்களுக்கு 'பிடிவாரன்ட்'

522பார்த்தது
இன்ஸ்பெக்டர்களுக்கு 'பிடிவாரன்ட்'
இன்ஸ்பெக்டர்களுக்கு 'பிடிவாரன்ட்'

திருமங்கலம்: மதுரை மாவட்டம் சிந்துபட்டி போலீஸ் ஸ்டேஷனில் 2011ல் எஸ். ஐ. , ஆக இருந்தவர் ராஜேஷ் கண்ணன்.
தற்போது தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்ஸ்பெக்டராக உள்ளார்.

எஸ். ஐ. , யாக இருந்தபோது நடந்த 2 சம்பவங்களின் வழக்கு திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சண்முகராஜா முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சியத்திற்காக பலமுறை ராஜேஷ் கண்ணாவிற்கு சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவரை மார்ச் 1ல் ஆஜர்படுத்த பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல் 2016 ல் சிந்துபட்டி போலீஸ் ஸ்டேஷன், 2020ல் திருமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில்
எஸ். ஐ. , யாக இருந்த செல்வகுமாரியால் பதியப்பட்ட வழக்குகளின் விசாரணை திருமங்கலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் சாட்சியத்திற்காக பலமுறை சம்மன் அனுப்பப்பட்ட போதும் நீலகிரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள செல்வகுமாரி ஆஜராகவில்லை. இவரையும் மார்ச் 1ல் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி