மதுரை சாப்டூர், சேடப்பட்டி போலீசார் மதுவிலக்கு சம்பந்தமாக ரோந்து சென்றனர். அப்போது மெய்யனுத்தம்பட்டி சேர்ந்த முருகேசன் 46, முருகன் 58, சின்ன கட்டளையை சேர்ந்த பாண்டி 33 ஆகியோர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த போது ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மதுபாட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.