காட்டுப்பன்றி மோதி விவசாயி பலி

58பார்த்தது
காட்டுப்பன்றி மோதி விவசாயி பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காட்டுப்பன்றி மோதி விவசாயி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டியை சேர்ந்த விவசாயி மோகன் ( 31) என்பவர் நேற்று முன்தினம் (செப்.14) இரவு கள்ளிக்குடியில் இருந்து திருமங்கலத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அவர் நேசநேரி விலக்கு அருகே வந்தபோது கண்மாய் பகுதியில் இருந்து ரோட்டை கடக்க முயன்ற காட்டுப்பன்றி இருசக்கரத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு அதே இடத்திலேயே மோகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி