திருமங்கலம்; கப்பலூர் சுங்கசாவடி போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆர். பி. உதயகுமார் கூறியதாவது
கப்பலூர் டோல்கேட் விதிமுறையை மீறி கடந்த 2010 ஆண்டு வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
தற்போது 2021 ஆண்டிலிருந்து விதிமுறை தளர்த்தப்பட்டது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கப்பட்டு மக்களை கசக்கி புழிகிறது, போராடினால் மக்கள் மீது அடக்குமுறை ஏவுகிறது மேலும் சுங்கச்சாவடி அபதார கட்டண நோட்டீஸ் விடப்பட்டு இரண்டு லட்சம் முதல், 20 இலட்சம் வரை அபதார கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலூர் டோல்கேட் விதிமுறைக்கு மீறி அமைக்கப்பட்டதால் அதை வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் போராட்டம் செய்து வருகிறோம்.
தற்பொழுது டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்று திருமங்கலம் தொகுதி மக்கள் முழு கடை அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்
தற்போது கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் மக்களிடத்தில் மனுக்களை வாங்க சென்ற போது காவல்துறை மக்களை கைது செய்கின்றனர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது எங்களையும் கைது செய்துள்ளனர்.
அண்ணா திமுக மக்களுக்காக போராடும் எத்தனை அடக்கமுடியை அரசு செய்தாலும் மக்களுக்காக போராடுவோம் இந்த அரசு மக்கள் உணர்வை மதிக்காத அரசாக உள்ளது என கூறினார்.