தார்ப்பாய் மூடாமல் செங்கல் லாரிகளால் அவதி

85பார்த்தது
தார்ப்பாய் மூடாமல் செங்கல் லாரிகளால் அவதி
தார்ப்பாய் மூடாமல் செங்கல் லாரிகளால் அவதி

திருமங்கலம்: மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் தார்ப்பாய் கொண்டு மூடாமல் லாரியில் செங்கல் கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் 500க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல் உள்ளன.

இங்கிருந்து மதுரை விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு செங்கல் விற்பனைக்கு லாரிகளில் தார்ப்பாயை கொண்டு மூடாமல் கொண்டு செல்கின்றனர். இதனால் டூவிலரில் செல்வோரும் நடந்து செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

துசியால் கடும் அவதிக்குள்ளாகின்றனர் கண்களில் தூசிபட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. தார்பாயால் மூடி பாதுகாப்பாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி