வரும் 30-ம் தேதி திருமங்கலம்தில் 'பந்த்'

74பார்த்தது
வரும் 30-ம் தேதி திருமங்கலம்தில் 'பந்த்'
வரும் 30-ம் தேதி திருமங்கலம்தில் 'பந்த்'

திருமங்கலம்: மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி குறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா, அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவுகளும் எட்டப்படாத நிலையில் 30-ம் தேதி திருமங்கலம் பகுதியில் முழு கடையடைப்பு மற்றும் கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக சுங்கச்சாவடி எதிர்ப்பு குழுவினர் அறிவித்தனர். இந்த தகவலை அடுத்து கப்பலூர் சுங்கச்சாவடி சார்பாக பாதுகாப்பு வேண்டி காவல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் போராட்டத்தை கைவிடக் கோரி இன்று கப்பலூர் சுங்கச்சாவடி எதிர்ப்புக் குழுவினரிடம் திருமங்கலம் டிஎஸ்பி அருள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வரும் 30-ம் தேதி திட்டமிட்டப்படி சுங்கச்சாவடி முற்றுகைப் போராட்டமும், முழு கடையடைப்பு போராட்டமும் நடத்துவதாக சுங்கச்சாவடி எதிர்ப்புக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ஹமீது ராஜா கூறுகையில், "விதிமுறையை மீறி அமைக்கப்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி