திருமங்கலம்: மதுரை கப்பலூர் புதுப்பேட்டையில் 450-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன இந்த நிலையில் இங்குள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் நேற்று முன்தினம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
அதில் அதிக அளவில் சேதம் ஏற்பட்ட நிலையில் கப்பலூர் தொற்பேட்டையில் தீயணைப்பு நிலையம் அமைக்க திருமங்கலம் எம்எல்ஏ முன்னாள் அமைச்சர் உதயகுமாரிடம் தொழில் பேட்டை தொழில் அதிபர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.