
மேலூர்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதிகளில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் கலெக்டர் மற்றும் டி.ஆர்.ஓ நேற்று ஆய்வு செய்தனர். கொட்டாம்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் அங்கன்வாடி மையங்களை கலெக்டர் சங்கீதா நேற்று ஆய்வு செய்தார். உடன் மேலூர் தாசில்தார் செந்தாமரை மற்றும் கொட்டாம்பட்டி பிடிஓ இருந்தனர். மேலூர் நகராட்சியில் சிவன் கோயில் அருகே உள்ள நகராட்சி பள்ளி, மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டுள்ள நூலகம், காய்கறி மார்க்கெட் வளாகம், நகராட்சி பணியாளர்களின் வருகை பதிவேடு மற்றும் நகராட்சிக்கு சொந்தமான அழகர் கோவில் ரோட்டில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, மேலூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் கெளதம், துணை தாசில்தார் தர்மலிங்கம், மேலூர் நகராட்சி கமிஷனர் பாரத், நகராட்சி பொறியாளர் முத்துக்குமார், மேலாளர் மாதவன், சுகாதார ஆய்வாளர் தினேஷ்குமார், ஓவர்சியர் உலகநாதன், நகராட்சி வருவாய் ஆய்வாளர் சரண்யா, மேலூர் அரசு தலைமை மருத்துவர் டாக்டர் ஜெயந்தி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், மேலூர் நகர் ஆர்ஐ பாலமுருகன், விஏஓ சிவன் சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.