மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் கிராமத்தை தலைமை இடமாகக் கொண்ட வெள்ளலூர் நாட்டில், 5 மாகாணங்கள் என வெள்ளலூர், அம்பலகாரன்பட்டி, உறங்கான்பட்டி, மலம்பட்டி, குறிச்சிபட்டியை குறிப்பிடுவார்கள். சித்திரை முதல் நாளான நேற்று (ஏப். 14) 200 கிலோ வெற்றிலையை மந்தையில் கொண்டு வந்து அம்பலகாரர்கள் 60 கிராமங்களுக்கு பிரித்து கொடுத்தனர். மேலும் கிலோ கணக்கில் வெற்றிலைகளை சேர்த்து, 10,000 குடும்பங்களுக்கு இவை பிரித்து வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.