மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பண்ணைகுடி கிராமத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணை பாம்பு கடித்ததில் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து அலங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்