மேற்கு வங்காளம்: மகிஷாமாரி கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த அக். 05-ல் சீரழித்து கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக முஸ்தாகின் சர்தார் (19) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் கைதானார். சர்தார் மீதான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று (டிச. 06) அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சம்பவம் நடந்த 2 மாதங்களிலேயே குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது.