மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழக அரசின் 'விலையில்லா மிதிவண்டி மற்றும் பள்ளி சீருடைகளை' வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாணவ மாணவியருக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் பள்ளி சீருடை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் பங்கேற்றனர்.