மதுரை: தலை துண்டிக்கப்பட் நிலையில் ஆண் சடலம் மீட்பு

83பார்த்தது
மதுரை: தலை துண்டிக்கப்பட் நிலையில் ஆண் சடலம் மீட்பு
மேலூர் அருகே பயன்படாத கிரானைட் குவாரி பள்ளத்தில், தலை துண்டிக்கப்பட்ட ஆண்சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியில் தண்ணீர் நிறைந்த பயன்படுத்தாத கிரானைட் குவாரி பள்ளம் உள்ளது. இதில் தலை இல்லாத சுமார் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் ஒன்று நேற்று (செப்.,30) மிதந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி அரவிந்த், மேலூர் டி. எஸ். பி. வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். தண்ணீரில் மிதக்கும் அந்த உடலை, இரவில் மீட்பதில் சிரமம் ஏற்பட்டதால் இன்று (அக்.,1) பகல் நேரத்தில் மீட்டு சம்பவ இடத்திலேயே உடற்கூராய்வு செய்ய மேலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி