திருப்பூர்: வீரசோழபுரம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் மனைவி வனிதா (42) குடும்ப செலவுக்காக மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக கடனை அடைக்க முடியாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வியாழன் (டிச. 05) இரவு வனிதா தனது வீட்டு சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.