மதுரை மாவட்டம் மேலூரில் புதிய தினசரி மார்கெட்டில் கடைகள் ஒதுக்கீடு சம்மந்தமாக சிஐடியூ சங்கத்தை சேர்ந்த தலைவர் மணவாளன் நகராட்சி தலைவரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது : மேலூர் தினசரி மார்கெட்டில் உள்ள கடைகளில் வாடகை நிலுவை தொகை இல்லாமல் கட்டிய நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் ஒதுக்க வேண்டுகிறோம். தரைக் கடைகளில் நகராட்சி நிர்வாகம் எங்கள் சங்க உறுப்பினர்கள் 66 நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து கடைகள் குழுக்கள் மூலமாக தேர்வு செய்ய வேண்டுகிறோம். கடைகள் ஒதுக்கிட்டில் தனிநபர்கள் தலையீட்டை நகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டுகிறோம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவரை சந்திக்கும் போது சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் பலர் இருந்தனர்.