மதுரை மாவட்டம் சேக்கிப்பட்டியில் மாவட்ட அளவிலான விவசாயிகளின் பயிற்சி கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டாரம் சேக்கிபட்டி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மானாவாரி பகுதியில் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி இன்று (ஆக. 28) நடைபெற்றது.
இப்பயிற்சியில் மேலாண்மை துணை இயக்குனர் கமலாலட்சுமி தலைமையேற்று ஒருங்கிணைந்த வேளாண்மை குறித்து கால்நடை வளர்ப்பு, தேனி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வேளாண் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். கொட்டாம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுபாசாந்தி வேளாண்மை திட்டங்கள் மற்றும் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உரையாற்றினார்.
இப்ப பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் ரகுராமன், உதவி வேளாண்மை அலுவலர் பாலசுப்ரமணியன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் ராஜதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் கண்ணன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.