அழகர் கோவில் அருள்மிகு சுந்தர ராசா உயர்நிலைப்பள்ளி மாணவியர்கள் தேசிய சாதனை. HCL நிறுவனம் கிராமப்புற மாணவர்களை தேசிய அளவில் விளையாட்டில் மேம்படுத்துவதற்காக அகில இந்திய அளவில் 21/07/2024 முதல்24/07/2024 வரை சென்னை SSN பொறியியல் கல்லூரியில் மாபெரும் கையுந்து பந்து போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு HCL அணிக்காக நமது பள்ளி மாணவியர்கள் ஐந்து பேர் சசியா, சுசீலா, பிரியதர்ஷினி, அஸ்வதி ஸ்ரீ, வானமதி ஆகியோர் மகாராஷ்ட்ரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மாநிலங்களின் மகளிர் அணிகளுடன் விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று வெற்றிக் கோப்பையும் சான்றிதழ்களும் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற பள்ளி செயலகம் துணை ஆணையருமான திரு கலைவாணன் அவர்களும் பள்ளி குழு தலைவரும் மண்டல இணை ஆணையருமான திரு செல்லதுரை அவர்களும் வீரர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். இந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பள்ளியின் உடைய தலைமை ஆசிரியர் செல்வராஜ் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.