அடிலெய்டில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி லபுஸேன் (64) மற்றும் டிராவிஸ் ஹெட்டின் (140) சிறப்பான ஆட்டத்தால் 157 ரன்கள் முன்னிலை பெற்று ஆல் அவுட்டானது. இந்திய அணியில் பும்ரா மற்றும் சிராஜ் 6 விக்கெட்களையும் நிதிஷ், அஸ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.