புதிய ரேஷன் அட்டை கோரி இதுவரை சுமார் 2 லட்சத்து 89 ஆயிரத்து 591 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1,54,500 நபர்களுக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 1,28,373 நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது. மேலும், புதிதாக ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்த தகுதி வாய்ந்த அனைவருக்கும் ரேஷன் அட்டை விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.