200 தொகுதிகளில் திமுக நிச்சயம் வெல்லும் என இறுமாப்புடன் சொல்கிறேன் என திமுக எம்.பி. கனிமொழி உறுதிப்பட கூறியுள்ளார். திருச்செந்தூரில் திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய கனிமொழி, "தேர்தல் வெற்றி தொண்டர்களின் கரங்களில்தான் இருக்கிறது. கட்டுப்பாடுடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம். அண்ணன் தளபதி சொல்வது போல் இறுமாப்புடன் சொல்கிறேன்.. வெற்றி நிச்சயம், வெற்றி நிச்சயம்" என்று தெரிவித்துள்ளார்.