கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாக கொண்டது. ’இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது’ என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார் நபிகள் நாயகம். இது, நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்புக் குறைய உதவும். இதய நோய், புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக கருஞ்சீரகம் கருதப்படுகிறது.