மதுரை கிழக்கு ஒன்றியம் மங்களகுடியில் முல்லைப் பெரியார் இரு போக பாசன சாகுபடியில் 20 ஏக்கருக்கு மேல் விவசாயம் பார்த்து வருகின்றனர்.
முதல் போக சாகுபடியாக நெற்பயிர்கள் பயிரிட்டு தற்போது நெற்பயிர்கள் பால் கோர்த்து வரும் நிலையில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருகின்றன. கருகு நெற்பயிர்களை பாதுகாக்க தொடர்ந்து முல்லை பெரியார் பாசன கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டால் இந்த கருகிய பயிர்களை பாதுகாத்துக் கொள்வோம் என விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
விவசாயிகள் கூறும்போது: இதுவும் ஒரு உயிர் தான் இந்த உயிர் கருகுவதை கண்டு மனசு ரொம்ப வேதனையா இருக்கு. அதிகாரிகள் உடனே தண்ணீர் திறந்து விட்டு இந்த பயிர்களை காப்பாற்றனும் என்றார்.
பயிர் எல்லாம் கருகி இருப்பதை பார்த்து தனது மகன் உடம்பு சரியில்லாமல் வீட்டில் படுத்து விட்டான். நாங்க வேற எதுவும் கேட்கல கருகும் பயிர்களுக்கு தண்ணீர் தான் கேட்கிறோம் உடனே அதிகாரிகள் இந்த நெற்பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஒரு ஏக்கருக்கு 25, 000 முதல் 30, 000 வரை செலவு செய்து பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயத்தில் உள்ளதால் முல்லை பெரியார் பாசனத்தில் தொடர்ந்து தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர்.