மதுரை பைக்காரா புதுமேட்டுத் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி இளமதி (24). இவரது கணவா் விஜயகுமாா். அதே பகுதியில் கைப்பேசி கடை வைத்து நடத்தி வந்தாா். கடையில் சரியான வருமானம் இல்லாததால் கடையை மூடிவிட்டு டைல்ஸ் பதிக்கும் வேலைக்குச் சென்று வருகிறாா்.
இந்த நிலையில், கைப்பேசி கடை நடத்திய போது தனது மனைவியின் 10 பவுன் தங்க நகைகளை அடகு வைத்திருந்தாா். கணவா் அதை மீட்டுத்தராததால் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்த நிலையில், விஜயகுமாா் வேலை தொடா்பாக நாகா்கோவிலுக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் சனிக்கிழமை இரவு தனியாக இருந்த இளமதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து சுப்ரமணியபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.