நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகம் சார்பாக இன்று (ஜன. 09) புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெரியார் கூறியதாக பொய்யான தகவலை கூறி சீமான் அவதூறு பரப்புவதாக வழக்குப்பதிய கோரப்பட்டுள்ளது. ஈரோடு, தஞ்சையில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் புகார் தரப்பட்டுள்ளது.