பாதாமை ஊறவைத்து சாப்பிட்டால் தான் பலன் கிடைக்கும் என பலரும் கூறுவதுண்டு. ஆனால் அதில் உண்மையில்லை. ஆய்வு ஒன்றில் பாதாமை 4 வகையாகப் பிரித்து, மக்களுக்கு கொடுத்து சோதித்துள்ளனர். அதில், ஊறவைத்து, காய வைக்கும் பொழுது அதிலுள்ள நீர்த் தன்மை குறைந்து ஊட்டச்சத்துக்கள் அதிகரிப்பது தெரியவந்தது. ஆனால் அப்படியே சாப்பிடுவதற்கும், ஊற வைத்து சாப்பிடுவதற்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.