மதுரையில் நேற்று(செப்.9) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி துறை சார்ந்த அதிகாரிகளிடம், தமிழக அரசின் விரிவான திட்டங்களையும், திட்டங்களை மக்களிடையே எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும், மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனை வழங்கினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்டத்தினுடைய சிறப்பு திட்ட செயலாக்க துறை மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். தற்போது பல்வேறு அரசு அதிகாரிகளுடன் திட்டம் குறித்து ஆய்வு நடத்தினோம். கடந்தாண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் எந்த அளவு நடைபெற்று வருகிறது? எவ்வளவு பணிகள் முடிவுற்றது? எந்தெந்த பணிகளில் சுணக்கம் உள்ளது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தோம். அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். மேலும், எந்த நேரத்திலும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றார்.