நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்

83பார்த்தது
நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்
ஒவ்வொருவரும் நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.

மதுரை சொக்கி குளத்தில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரமடத்தில் காமாட்சி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு மதுரை காஞ்சி சங்கர மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் காமாட்சி அம்பாளுக்குதங்க கவசம் சார்த்தப்பட்டது. மதுரை மடத்தில் ராதாகிருஷ்ணன் சாஸ்திரிகள் சிறப்பு தீபாராதனை செய்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் ஸ்ரீமதி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது உலகத்தில் நாம் சர்வே ஆக வேண்டுமென்றால் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக நமது கலாச்சாரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதுமட்டுமின்றி அதை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி